மதுரையில் வேன் - லாரி மோதி விபத்து; அய்யப்ப பக்தர்கள் 5 பேர் படுகாயம்
சபரிமலையில் இருந்து வந்த வேன் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானது.
மதுரை,
தமிழ்நாட்டை சேர்ந்த அய்யப்ப பக்தர்கள் சபரிமலையில் சாமிதரிசனம் செய்துவிட்டு வேனில் சொந்த ஊர் திரும்பிக்கொண்டிருந்தனர்.
மதுரை ஒத்தக்கடை சந்திப்பு அருகே இன்று அதிகாலை வந்துகொண்டிருந்தபோது வேன் மீது திருச்சியில் இருந்து வந்த லாரி நேருக்குநேர் மோதியது. இந்த விபத்தில் வேனில் பயணித்த அய்யப்ப பக்தர்கள் 5 பேர் படுகாயமடைந்தனர்.
தகவலறிந்து விரைந்து வந்த போலீசார், படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.
Related Tags :
Next Story