திருச்சி விமான நிலையத்தில் 5 கிலோ தங்கம் பறிமுதல்


திருச்சி விமான நிலையத்தில் 5 கிலோ தங்கம் பறிமுதல்
x

திருச்சி விமான நிலையத்தில் 5 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

திருச்சி

திருச்சி விமான நிலையத்தில் 5 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

தங்கம் பறிமுதல்

திருச்சி விமான நிலையத்துக்கு நேற்று துபாயில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் வந்தது. இந்த விமானத்தில் சரக்கு பெட்டிகளில் தங்கம் கடத்தி வருவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் வந்தது.

இதனையடுத்து அந்த விமானம் வந்ததும் சுங்கத்துறை அதிகாரிகள் விமானத்தில் சரக்கு வைக்கப்பட்டு இருந்த பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அங்கிருந்த ஒரு அட்டை பெட்டியை சந்தேகத்தின் பேரில் திறந்து பார்த்ததில் தங்கம் இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து சுங்கத்துறை அதிகாரிகள் அந்த தங்கத்தை பறிமுதல் செய்து மத்திய வருவாய் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

5 கிலோ?

பறிமுதல் செய்யப்பட்ட தங்கம் சுமார் 5 கிலோ இருக்கும் என கூறப்படுகிறது. இது தொடர்பாக அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையின் முடிவில் தான் கடத்தப்பட்டு வந்த தங்கத்தின் அளவு எவ்வளவு என்பது தெரியவரும் என விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன.


Next Story