சேலம் வழியாக கேரளா சென்ற ரெயிலில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்
சேலம் வழியாக கேரளா சென்ற ரெயிலில் 5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
சேலம்
சூரமங்கலம்:
ெரயில்களில் கஞ்சா கடத்தப்படுவதை தடுக்கும் வகையில் ெரயில்வே போலீசார் நேற்று சேலம் வழியாக சென்ற தன்பாத் - ஆழப்புழா எக்ஸ்பிரஸ் ெரயிலில் (வண்டி எண் 13351) சோதனை நடத்தினர். இந்த சோதனை பொம்மிடி- சேலம் ெரயில் நிலையங்களுக்கு இடையே நடத்தப்பட்டது, அப்போது முன்பதிவில்லா பெட்டியில் சந்தேகத்துக்கு இடமாக ஒரு பை இருந்தது, அதனை திறந்து சோதனை நடத்தியதில் 2 பண்டல்களில் 5 கிலோ கஞ்சா இருந்தது, மேலும் அந்த பை யாருடையது என்பது தெரியவில்லை. இதையடுத்து போலீசார் கஞ்சாவை பறிமுதல் செய்து, அதனை யார்? கடத்தி வந்தது என்று விசாரணை நடத்தி வருகிறார்கள். பின்னர் 5 கிலோ கஞ்சா சேலம் ரெயில்வே போலீசில் ஒப்படைக்கப்பட்டது.
Related Tags :
Next Story