நாகை மாவட்டத்தில் 5 லட்சத்து 58 ஆயிரத்து 930 வாக்காளர்கள்


நாகை மாவட்டத்தில் 5 லட்சத்து 58 ஆயிரத்து 930 வாக்காளர்கள்
x

நாகை மாவட்டத்தில் 5 லட்சத்து 58 ஆயிரத்து 930 வாக்காளர்கள்

நாகப்பட்டினம்

நாகை மாவட்டத்தில் நேற்று வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலில் 5 லட்சத்து 58 ஆயிரத்து 930 பேர் உள்ளனர். இதில் ஆண்களை விட பெண் வாக்காளர்களே அதிகமாக உள்ளனர்.

இறுதி வாக்காளர் பட்டியல்

நாகை மாவட்டத்தில் நடப்பாண்டு ஜனவரி 1-ந்தேதியை தகுதிநாளாக கொண்டு இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், கலெக்டருமான அருண்தம்புராஜ் தலைமை தாங்கி, இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டார்.

அதன் விவரம் பின் வருமாறு:-

நாகை மாவட்டத்தில் மொத்தம் 651 வாக்குச்சாவடிகள் உள்ளன. அதன்படி நாகை சட்டமன்ற தொகுதியில் 93,331 ஆண்களும், 99,439 பெண்களும் 20 மூன்றாம் பாலினத்தவர்களும் என மொத்தம் 1,92,790 வாக்காளர்கள் உள்ளனர்.

அதேபோல கீழ்வேளூர் சட்டமன்ற தொகுதியில் 85,652 ஆண்களும், 89,474 பெண்களும், 2 மூன்றாம் பாலினத்தவர்களும் என மொத்தம் 1,75,128 வாக்காளர்கள் உள்ளனர்.

வேதாரண்யம் சட்டமன்ற தொகுதியில் 93,667 ஆண்களும், 97,345 பெண்களும் என மொத்தம் 1,91,012 வாக்காளர்கள் உள்ளனர்.

ஆண்களை விட பெண்களே அதிகம்

அதன்படி நாகை மாவட்டத்தில் மொத்தம் உள்ள 3 சட்டமன்ற தொகுதிகளில் 2,72,650 ஆண்களும், 2,86,258 பெண்களும், 22 மூன்றாம் பாலினத்தவர்களும் என மொத்தம் 5,58,930 வாக்காளர்கள் உள்ளனர். ஆண்களை விட பெண்களே அதிகம் உள்ளனர்.

இந்த இறுதி வாக்காளர் பட்டியலில் உள்ள தொடர் திருத்தத்தில் பொதுமக்கள் தங்களின் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம் மற்றும் முகவரிமாற்றத்திற்கான உரிய படிவங்களை தொடர்புடைய தாலுகா அலுவலகங்களில் சமர்ப்பிக்கலாம். மேலும் www.nvsp.in என்ற இணையதளமுகவரியில் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ஷகிலா உள்பட அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் பலர் கலந்துகொண்டனர்.

இதேபோல இறுதிவாக்காளர் பட்டியல், வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகங்கள், உதவி வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகங்கள், அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் நேற்று வெளியிடப்பட்டது.


Next Story