வெளிமாநிலங்களுக்கு தினமும் 5 லட்சம் இளநீர்
பொள்ளாச்சி, ஆனைமலையில் இருந்து வெளிமாநிலங்களுக்கு தினமும் 5 லட்சம் இளநீர் லாரிகளில் அனுப்பி வைக்கப்படுகிறது.
பொள்ளாச்சி
பொள்ளாச்சி, ஆனைமலையில் இருந்து வெளிமாநிலங்களுக்கு தினமும் 5 லட்சம் இளநீர் லாரிகளில் அனுப்பி வைக்கப்படுகிறது.
இளநீர்
கோவை மாவட்டம் பொள்ளாச்சி, ஆனைமலை பகுதிகளில் தென்னை விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. இந்த பகுதி யில் விளையும் இளநீர் தமிழகம் மட்டுமல்லாது வெளி மாநிலங்க ளுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது.
தற்போது இளநீர் உற்பத்தி அதிகரித்து உள்ளது. இதனால் விலை குறைந்து உள்ளது. மேலும் தேவை அதிகமாக இருப்பதால் .இளநீர்அனுப்பி வைக்கப்படுகிறது.
இது குறித்து ஆனைமலை வட்டார இளநீர் உற்பத்தியாளர்கள் சங்க தலைமை ஒருங்கிணைப்பாளர் சீனிவாசன் கூறியதாவது:-
உற்பத்தி அதிகரிப்பு
பொள்ளாச்சி, உடுமலை, ஆனைமலை பகுதிகளில் இருந்து முதலில் சென்னை, மதுரை, தூத்துக்குடி, ராஜபாளையம் உள் ளிட்ட பகுதிகளுக்கு தான் இளநீர் அனுப்பி வைக்கப்படுகிறது.
தற்போது டெல்லி, குஜராத், ராஜஸ்தான், உத்தரபிரேதம், ஆந்திரா, கர்நாடகா, பஞ்சாப், மத்திய பிரதேசம் உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கு இளநீர் லாரி மற்றும் கனரக வாகனங்களில் கொண்டு செல்லப்படுகிறது.
வழக்கமாக பிப்ரவரி மாதத்தில் இருந்து இளநீர் உற்பத்தி குறைய தொடங்கும். ஆனால் நவம்பர் முதல் ஜனவரி வரை இளநீர் உற்பத்தி அதிகமாக இருக்கும். கடந்த மாதம் இளநீர் ரூ.24-க்கு வியாபாரிகள் வாங்கி சென்றனர். தற்போது ரூ.17-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
விலை குறைந்தது
இதேபோன்று ஒரு டன் இளநீர் விலை ரூ.9 ஆயிரத்தில் இருந்து ரூ.6 ஆயிரமாக குறைந்து விட்டது. கடந்த மாதம் மழை காரண மாக மரங்களில் இளநீர் வெட்டப்படாமல் இருந்தது.
தற்போது மழை இல்லாததாலும், வரத்து அதிகரிப்பு காரணமாக பொள்ளாச்சி, ஆனைமலை, உடுமலை பகுதிகளில் இருந்து தினமும் 5 லட்சம் இளநீர் னுப்பி வைக்கப்படுகிறது.
குஜராத், ராஜஸ்தான், டெல்லி உள்பட பல்வேறு மாநிலங்களுக்கு இளநீர் லாரிகளில் அனுப்பி வைக்கப்படுகிறது. இதில் மும்பைக்கு அதிகமாக ஏற்றுமதி ஆகிறது. தமிழகத்தில் மழை குறைந்து உள்ளதால் இளநீர் தேவை அதிகரித்து உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.