ரூ.5½ லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல்


ரூ.5½ லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல்
x

பெரியநாயக்கன்பாளையம் அருகே ரூ.5½ லட்சம் புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

கோயம்புத்தூர்

இடிகரை

பெரியநாயக்கன்பாளையம் போலீஸ் துணை சூப்பிரண்டு ராஜ பாண்டியன் உத்தரவின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயபிரகாஷ் மற்றும் போலீசார் காளிபாளையம் பகுதியில் ரோந்து சென்றனர்.

அப்போது கர்நாடக மாநில பதிவு எண் கொண்ட கார் நீண்ட நேரம் நின்று கொண்டிருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் காரில் இருந்த 2 பேரிடம் விசாரித்தனர். அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்தனர்.

உடனே போலீசார் அந்த காரை சோதனை செய்தனர். அப்போது காரில் தடை செய்யப்பட்ட 525 கிலோ புகையிலை பொருட்கள் இருந்தன. அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். அதன் மதிப்பு ரூ.5 லட்சத்து 65 ஆயிரம் ஆகும்.

விசாரணையில் அவர்கள், கர்நாடக மாநிலம் மைசூரை சேர்ந்த கார் டிரைவர் யஸ்வந்த் (வயது 22), ஆட்டோ டிரைவர் நிஷாந்த் (24) என்பதும், மைசூரில் இருந்து தடை செய்யப்பட்ட புகையி லை பொருட்களை கடத்தி வந்து தமிழகத்தில் விற்பனை செய்ய முயன்றதும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.


Next Story