பெண்ணிடம் 5½ பவுன் சங்கிலி பறிப்பு
திருச்சியில் பெண்ணிடம் 5½ பவுன் சங்கிலி பறிக்கப்பட்டது.
திருச்சி
மலைக்கோட்டை, ஜூலை.9-
திருச்சி கோட்டை பகுதியில் உள்ள இ.பி.ரோடு, தேவதானம் பகுதியை சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி கல்பனா (வயது 40). இவர் நேற்று முன்தினம் தனது மொபட்டில் சென்னை பைபாஸ் ரோட்டில் இருந்து ஓயாமரி சாலையில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். அப்போது அவருக்கு பின்னால் ஹெல்மெட் அணிந்து ஒரு மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர் திடீரென கல்பனா கழுத்தில் அணிந்திருந்த 5½ பவுன் தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பி சென்றார். இது குறித்த புகாரின் பேரில் கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து கல்பனாவிடம் தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபரை வலை வீசி தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story