சூதாடிய 5 பேர் கைது


சூதாடிய 5 பேர் கைது
x

வளையப்பட்டியில் சூதாடிய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

நாமக்கல்

மோகனூர்

மோகனூர் அடுத்த வளையப்பட்டி பகுதியில் பணம் வைத்து சூதாடுவதாக மோகனூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் துர்க்கை சாமி தலைமையிலான போலீசார் வளையப்பட்டி பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது வளையப்பட்டி சந்தை பகுதியில் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்தவர்கள் போலீசாரை கண்டதும் தப்பி ஓட முயன்றனர். அவர்களை சுற்றி வளைத்து பிடித்தனர் விசாரணையில் வளையப்பட்டி வள்ளுவர் நகரை சேர்ந்தவர்கள் சரவணன் (வயது 29), கணபதி (41), சிவசுப்பிரமணி (42), முனியப்பன் (39) மற்றும் மெயின் ரோடு பகுதியை சேர்ந்த அன்புச்செல்வன் (32) ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்களிடம் இருந்து சீட்டு கட்டு மற்றும் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

1 More update

Next Story