கிராவல் மண் அள்ளிய 5 பேர் கைது
கிராவல் மண் அள்ளிய 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
அரியலூர்
அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்துக்குட்பட்ட மறவனூர் மாரியம்மன் கோவில் அருகே உள்ள ஏரியில் சிலர் சட்டத்திற்கு புறம்பாக கிராவல் மண் அள்ளுவதாக பார்ப்பனச்சேரி கிராம நிர்வாக அலுவலர் சீனிவாசன் கீழப்பழுவூர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சிலர் 3 டிராக்டர்களில் கிராவல் மண் அள்ளிக் கொண்டிருந்தனர். போலீசாரை கண்டதும் அவர்கள் அங்கிருந்து தப்பி ஓடினர். இருப்பினும் போலீசார் 5 பேரை மடக்கி பிடித்தனர். விசாரணையில், அவர்கள் பெரம்பலூர் மாவட்டம் செல்லக்குடி கிராமத்தை சேர்ந்த ஜெயபால் (வயது 33), அரியலூர் மாவட்டம் மறவனூர் கிராமத்தை சேர்ந்த முருகேசன் (45), ராஜேந்திரன் (53), ரமேஷ் (42), செல்வகுமார் (38) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 5 பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Related Tags :
Next Story