கஞ்சா விற்ற 5 பேர் கைது
கஞ்சா விற்ற 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருச்சி வரகனேரி பகுதியில் காந்தி மார்க்கெட் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிற்றரசு தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் 2 பேர் கஞ்சா விற்று கொண்டிருந்தனர். போலீசார் அவர்களை பிடித்து விசாரணை நடத்தினர். இதில், அவர்கள் திருச்சி காஜாபேட்டை கீழே கிருஷ்ணன் கோவில் வீதியை சேர்ந்த சகாயராஜ்(வயது 19), சங்கிலியாண்டபுரம் மணல்வாரித்துறை சாலை பாரதிநகர் பகுதியை சேர்ந்த கலியமூர்த்தி(20) என்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து 2 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 1 கிலோ 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இதேபோல் பாலக்கரை காஜாபேட்டை பகுதியில் கஞ்சா விற்றதாக அதே பகுதியை சேர்ந்த மணிகண்டன்(24), அபு(20), சந்தோஷ்குமார்(19) ஆகியோரை பாலக்கரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 1 கிலோ 100 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.