தொழிலாளி கொலை வழக்கில் 5 பேர் கைது


தொழிலாளி கொலை வழக்கில் 5 பேர் கைது
x

சிவகாசியில் தொழிலாளி கொலை வழக்கில் போலீசார் 5 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

விருதுநகர்

சிவகாசி,

சிவகாசியில் தொழிலாளி கொலை வழக்கில் போலீசார் 5 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தொழிலாளி

சிவகாசி பள்ளப்பட்டி ரோட்டில் உள்ள முத்துராமலிங்க காலனியை சேர்ந்தவர் கருப்பையா மகன் சுந்தரபாண்டி (வயது 32). இவர் சிவகாசி-பழைய விருதுநகர் ரோட்டில் உள்ள ஒரு சாம்பிராணி தயாரிக்கும் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். கடந்த 4-ந் தேதி மாலை நிறுவனத்தின் வெளியே நடுரோட்டில் நின்று கொண்டிருந்தபோது அங்கு வந்த மர்ம கும்பல் அவரை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி சென்றது.

இதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த சுந்தரபாண்டியை அந்த பகுதியை சேர்ந்தவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிவகாசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சையில் இருந்த சுந்தரபாண்டி சிறிது நேரத்தில் பரிதாபமாக இறந்தார்.

கண்காணிப்பு கேமரா

இந்த சம்பவம் குறித்து சுந்தரபாண்டியின் தாய் தனலட்சுமி சிவகாசி கிழக்கு போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இதில் இந்த கொலை சம்பவத்தில் சாமுவேல் உள்ளிட்ட 5 பேர் ஈடுபட்டது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்தது. அந்த பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்த காட்சிகளை வைத்து போலீசார் ஆய்வு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

5 பேர் கைது

இந்தநிலையில் கொலை சம்பவத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்ய சிவகாசி கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் கவுதம் தலைமையில் 2 தனிப்படை அமைக்கப்பட்டு சங்கரன்கோவில், ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், விருதுநகர் உள்ளிட்ட இடங்களில் போலீசார் தேடிவந்தனர்.

இதற்கிடையில் கொலை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் நாரணாபுரத்தில் ஒரு பகுதியில் பதுங்கி இருப்பதாக இன்ஸ்பெக்டர் கவுதமனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் கவுதம் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் சுந்தர்ராஜ், ஆத்தீஸ்வரன், அப்துல்காதர், அஜித்குமார் ஆகியோர் நாரணாபுரம் விரைந்தனர். அங்கு பதுங்கி இருந்த சாமுவேல் (வயது 21), வீரபுத்திரன் (20), கண்ணன் (20), ஆனந்த் (23) உள்பட 5 பேரை சுற்றி வளைத்து கைது செய்தனர். இந்த கொலை வழக்கில் மேலும் சிலர் ஈடுபட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story