மானாமதுரை அருகே -நாட்டுத்துப்பாக்கிகளுடன் 5 பேர் கைது
மானாமதுரை அருகே நாட்டுத்துப்பாக்கிகள் வைத்திருந்த 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
மானாமதுரை
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே கால்பிரிவு பகுதியில் உள்ள நான்கு வழிச்சாலையில் மானாமதுரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பூபதிராஜ் மற்றும் போலீசார் நேற்று இரவு வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் வந்த மினிலாரியை நிறுத்தி அதில் இருந்த 5 பேரிடம் விசாரணை நடத்தினர். அதில் அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அந்த மினிலாரியில் சோதனையிட்டனர். அப்போது அதில் 2 நாட்டுத்துப்பாக்கிகள், பால்ரஸ் குண்டுகள் உள்ளிட்டவை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில் அவர்கள் திருச்சி மாவட்டம் மணப்பாறை பகுதியை சேர்ந்த சுப்பிரமணியன் (வயது 73), மோகன்ராஜ்(33), ரவிக்குமார்(28), நடராஜன்(36), அஜித்குமார்(23) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 5 பேரையும் போலீசார் கைது செய்தனர்.