அருப்புக்கோட்டை அருகே பெண்ணை காரில் கடத்தி கூட்டு பாலியல் வன்கொடுமை - 2 சிறுவர்கள் உள்பட 5 பேர் கைது


அருப்புக்கோட்டை அருகே பெண்ணை காரில் கடத்தி கூட்டு பாலியல் வன்கொடுமை - 2 சிறுவர்கள் உள்பட 5 பேர் கைது
x

அருப்புக்கோட்டை அருகே பெண்ணை காரில் கடத்தி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

விருதுநகர்,

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே கரிசல்குளத்தை சேர்ந்தவர் முத்துசெல்வம். இவர் தனது காரில் விருதுநகர் சென்று விட்டு வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது பெண் ஒருவர் பாலவனத்தம் பஸ் நிறுத்தம் பகுதியில் நின்றுள்ளார்.

அந்த பாதையாக காரில் வந்த முத்துசெல்வம், தெரிந்த நபர் என்பதால் அந்த பெண்ணுக்கு லிப்ட் கொடுத்துள்ளார். பின்னர், அந்த பெண்ணை முத்துசெல்வன் ஒரு இடத்தில இறக்கி விட்டுள்ளார். அப்போது காரில் பின் தொடர்ந்து வந்த மர்ம கும்பல் ஒன்று முத்துசெல்வத்தை தாக்கி விட்டு பெண்ணை கடத்தி சென்றது.

பின்னர், அந்த பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த கும்பல், அவர் அணிந்திருந்த 5 சவரன் நகையையும் பறித்து சென்றனர்.

இது தொடர்பான புகாரின் பேரில் சிசிடிவி பதிவுகளை கொண்டு போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் பெண்ணை கடத்தி சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவத்தில் 2 சிறுவன் உட்பட 5 பேரை போலீசார் கைது செய்துள்ளார்.

மேலும் தலைமறைவாக உள்ள 2 பேரை பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இவர்கள் மீது ஆள்கடத்தல், கூட்டு பாலியல் வன்கொடுமை, நகைக் கொள்ளை உள்பட 9 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

1 More update

Next Story