2 சிறுமிகள் உள்பட 5 பேருக்கு டெங்கு


2 சிறுமிகள் உள்பட 5 பேருக்கு டெங்கு
x

புதுக்கோட்டை மாவட்டத்தில் 2 சிறுமிகள் உள்பட 5 பேர் டெங்கு காய்ச்சலுக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

புதுக்கோட்டை

புதுக்கோட்டை மாவட்டத்தில் வைரஸ் காய்ச்சல் பரவலாக உள்ளது. டெங்கு பாதிப்பிலும் சிலர் சிகிச்சை பெற்று வருகின்றனர். காய்ச்சல் பரவலை தடுக்க சிறப்பு மருத்துவ முகாம்கள் சுகாதாரத்துறை சார்பில் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் 9 வயது மற்றும் 11 வயதுடைய 2 சிறுமிகள் டெங்கு காய்ச்சலால் பாதிப்படைந்தனர். இதேபோல 3 வாலிபர்களுக்கும் டெங்கு காய்ச்சல் பாதித்திருந்தது. இவர்கள் 5 பேரும் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மாவட்டத்தில் ஏற்கனவே 76 பேர் டெங்கு காய்ச்சல் பாதிப்பில் சிகிச்சை பெற்று குணமடைந்திருந்தனர். தற்போது மேலும் 5 பேர் பாதிப்படைந்துள்ளதால் எண்ணிக்கை 82 ஆக உயர்ந்துள்ளது.


Next Story