கவுன்சிலர் கொலை வழக்கில் பெண் உள்பட 5 பேர் கோர்ட்டில் சரண்


கவுன்சிலர் கொலை வழக்கில் பெண் உள்பட 5 பேர் கோர்ட்டில் சரண்
x

கவுன்சிலர் கொலை வழக்கில் பெண் உள்பட 5 பேர் கோர்ட்டில் சரண் அடைந்தனர்.

காஞ்சிபுரம்

காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை அடுத்த நடுவீரப்பட்டு எட்டையபுரம் எட்டியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சதீஷ் (வயது 31), இவர் 7-வது வார்டு கவுன்சிலராகவும் தி.மு.க. வார்டு செயலாளராகவும் பதவி வகித்து வந்தார். இவருக்கும் அதே ஊரை சேர்ந்த தி.மு.க.வை சேர்ந்த எஸ்தர் என்கிற லோகேஸ்வரி (37) என்பவருக்கும் முன் விரோதம் இருந்து வந்தது.

மேலும் அந்த பகுதியில் சட்ட விரோதமாக மதுபானங்களை விற்கபடுவதாகவும் இதனை சதீஷ் தடுத்து வந்ததாகவும் கூறப்படுகிறது.இதனால் இருவருக்கும் பகை ஏற்பட்டு பேச்சு வார்த்தை நடத்தியுள்ளதாகவும் இதற்கு உடன்படாமல் இருந்த சதீஷை மீண்டும் நேற்று முன்தினம் லோகேஸ்வரி பேச்சு வார்த்தைக்கு அழைத்ததன் பேரில் அவரது வீட்டுக்கு சதீஷ் சென்றுள்ளார்.

உள்ளே சென்றவுடன் அங்கிருந்த மர்ம நபர்கள் அவரை வெட்டி படுகொலை செய்து விட்டு உடலை வெளியில் இழுத்து வந்து போட்டுள்ளனர். சதீஷை வெட்டி கொலை செய்த மர்மநபர்கள் அங்கிருந்து தப்பிச்சென்று விட்டனர்.

இது குறித்து சோமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு சென்ற மணிமங்கலம் போலீஸ் உதவி கமிஷனர் ரவி விசாரணை செய்தார். இந்த கொலை உட்கட்சி மோதலால் நடைபெற்றதா? அல்லது மது விற்பனை தடுக்கப்பட்டதால் நடத்தப்பட்டதா? என போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வந்தனர். மேலும் தலைமறைவாக உள்ள லோகேஸ்வரி மற்றும் மர்ம நபர்களை சோமங்கலம் குற்றப்பிரிவு போலீசார் தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வந்தனர்.

இந்த நிலையில் இந்த கொலை வழக்கு சம்பந்தமாக எட்டையாபுரம் பகுதியை சேர்ந்த லோகேஸ்வரி (38), நல்லூர் பகுதியை சேர்ந்த நவமணி (28), புதுநல்லூர் பகுதியை சேர்ந்த சதீஷ் (31), கோழி என்கிற அன்பு (25) ராஜேஷ் (37) ஆகியோர் சைதாப்பேட்டை கோர்ட்டில் சரண் அடைந்தனர்.


Next Story