வழிப்பறியில் ஈடுபட்ட 5 பேர் கைது


வழிப்பறியில் ஈடுபட்ட 5 பேர் கைது
x

வழிப்பறியில் ஈடுபட்ட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருச்சி

லால்குடி மகாஜனம் ஆலங்குடியை சேர்ந்த கார் டிரைவர் பூபதி(வயது 25) திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையம் அருகே நின்றபோது, அவரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த திருச்சி கீழசிந்தாமணியை சேர்ந்த பாலமுருகன் என்ற வெந்தகை பாலா(35), கரூர் குளித்தலையை சேர்ந்த ஷாஜகான்(31), சந்துக்கடையை சேர்ந்த கணேஷ்(38) ஆகியோரை கண்டோன்மெண்ட் போலீசார் கைது செய்தனர். இதேபோல் திருச்சி மத்திய பஸ்நிலையத்தில் புத்தூரை சேர்ந்த சின்னசாமியிடம் பணம் பறித்ததாக பிரபாகரன், சாமிநாதன் ஆகிய 2 பேரை கண்டோன்மெண்ட் போலீசார் கைது செய்தனர்.


Next Story