பணம் வைத்து சூதாடிய 5 பேர் கைது


பணம் வைத்து சூதாடிய 5 பேர் கைது
x

பணம் வைத்து சூதாடிய 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

புதுக்கோட்டை

திருமயம்:

திருமயம் அருகே மேலூர் ஆலங்கண்மாய் கரையில் பணம் வைத்து சூதாடுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதை அடுத்து திருமயம் ேபாலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தமாறன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். அப்போது அங்கு பணம் வைத்து சூதாடி கொண்டிருந்த அதே ஊரை சேர்ந்த பழனியப்பன் (வயது 70), ஆண்டியான் (32), சுப்ரமணியன் (62), சின்னசாமி (60), ஆறுமுகம் (47) ஆகிய 5 பேரை கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து ரூ.250 மற்றும் சீட்டு கட்டுகள், மோட்டார் சைக்கிள்கள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.


Next Story