பணம் வைத்து சூதாடிய 5 பேர் கைது


பணம் வைத்து சூதாடிய 5 பேர் கைது
x

பணம் வைத்து சூதாடிய 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

கரூர்

தென்னிலை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது தென்னிலை அருகே அரிக்காரன்பாளையத்தை சேர்ந்த பொன்னுசாமி என்பவரது தோட்டத்தில் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்த தென்னிலை கொடுமுடி ரோடு பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் (வயது 51), கதர்கடை பகுதியை சேர்ந்த முத்துக்குமார் (37), சாலைத்தோட்டத்தை சேர்ந்த செந்தில்குமார் (34), காட்டுப்பாளையத்தை சேர்ந்த சூரிய பிரகாஷ் (23), திருப்பூர் மாவட்டம், முத்தூர் மாதவரத்தை சேர்ந்த பிரதீப் (வயது 23), ஆகிய 5 பேரை பேரையும் தென்னிலை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து, ரூ.2,750 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டன.


Next Story