பணம் வைத்து சூதாடிய 5 பேர் கைது


பணம் வைத்து சூதாடிய 5 பேர் கைது
x

பணம் வைத்து சூதாடிய 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

அரியலூர்

அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே உள்ள உல்லியக்குடி பகுதிகளில் சிலர் பணம் வைத்து சூதாடுவதாக பல்வேறு புகார் வந்தது. இதன்பேரில் விக்கிரமங்கலம் சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் தலைமையிலான போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வனப்பகுதியில் உள்ள அய்யனார் கோவிலில் அருகே சூதாடிக்கொண்டு இருந்தவர்கள் போலீசாரை கண்டதும் அங்கிருந்து தப்பி ஓடினர். இருப்பினும் 5 பேரை போலீசார் மடக்கி பிடித்தனர். விசாரணையில் அவர்கள் செட்டி திருக்கோணத்தை சேர்ந்த வேலுச்சாமி (வயது 31), சத்தியமூர்த்தி (31), ஓரியூர் கிராமத்தை சேர்ந்த அய்யப்பன் (44), குருவாடி கிராமத்தை சேர்ந்த சிவகுமார் (48), உல்லியக்குடி கிராமத்தை சேர்ந்த குமரவேல் (47) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 5 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும், இவர்களிடம் இருந்து சீட்டுக்கட்டுகள் மற்றும் ரூ.35 ஆயிரத்து 580 ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.


Next Story