குற்றால அருவியில் பாறைகள் உருண்டு விழுந்ததில் 5 பேர் காயம்


குற்றால அருவியில் பாறைகள் உருண்டு விழுந்ததில் 5 பேர் காயம்
x

குற்றாலம் மெயின் அருவியில் பாறைகள் உருண்டு விழுந்ததில் 5 பேர் படுகாயமடைந்தனர்.

தென்காசி,

தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றாலம் மெயின் அருவியில் ஆண்கள் மற்றும் பெண்கள் குளிப்பதற்கு தனித்தனி வரிசைகள் ஒதுக்கப்பட்டு சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டு வரும் நிலையில், இன்று ஆண்கள் குளிக்கும் பகுதியில் திடீரென பாறைக் கற்கள் உருண்டு விழுந்தன.

இதில் அருவியில் குளித்துக் கொண்டிருந்த 5 பேர் படுகாயமடைந்தனர். இதையடுத்து அங்கிருந்த காவலர்கள் படுகாயமடைந்தவர்களை மீட்டு தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து தீயணைப்புத்துறையினர் அருவியின் மேற்பகுதிக்குச் சென்று பார்வையிட்டு வருகின்றனர். இதனால் மெயின் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.


1 More update

Next Story