கார் தலைகுப்புற கவிழ்ந்து 5 பேர் காயம்


கார் தலைகுப்புற கவிழ்ந்து 5 பேர் காயம்
x
தினத்தந்தி 7 July 2023 1:15 AM IST (Updated: 7 July 2023 1:15 AM IST)
t-max-icont-min-icon

கோவை சுங்கம் அருகே கார் தலைகுப்புற கவிழ்ந்து 5 பேர் காயம் 5 பேருக்கு ஏற்பட்டது.

கோயம்புத்தூர்

கோவை செல்வபுரத்தை சேர்ந்த கவுதம் உள்பட 5 பேர் நேற்று முன்தினம் இரவு காரில் கோவை- திருச்சி ரோடு சுங்கம் பைபாஸ் ரோட்டில் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது திடீரென்று நாய் ஒன்று காரின் குறுக்கே பாய்ந்தது. அதன் மீது மோதாமல் இருக்க காரை திருப்பி உள்ளனர். அப்போது கார், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி அங்குள்ள பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்தது.

இதில் காரில் இருந்த 5 பேருக்கும் காயம் ஏற்பட்டது. அவர்கள் அனைவரும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். காரில் ஏர்பேக் (பலூன்) திறந்ததால் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது.

இந்த விபத்து குறித்து கோவை கிழக்கு பகுதி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story