கத்திக்குத்து தகராறில் 5 பேர் சிக்கினர்
கத்திக்குத்து தகராறில் 5 பேர் சிக்கினர்
துடியலூர்
கோவை துடியலூரை அடுத்த அப்பநாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர் பிரகாஷ்ராஜ். அவர் தனது நண்பர் மனோஜ் ராஜூ டன் என்.ஜி.ஜி.ஓ. காலனி பகுதிக்கு சென்றார்.
அப்போது அங் கிருந்த வினோ, யுவராஜ், நவநீதன், சரண், நாகேந்திரன் உள் ளிட்ட சிலர், பிரகாஷ்ராஜ், மனோஜ்ராஜ் ஆகியோரை தடுத்து நிறுத்தினர்.
இதனால் அவர்கள் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள் மாறி மாறி தாக்கிக் கொண்டனர்.
அப்போது வினோ தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் பிரகாஷ்ராஜ், மனோஜ்ராஜ் ஆகியோரை குத்தினார். இதில் அவர்கள் 2 பேருக்கும் ரத்த காயம் ஏற்பட்டது.
உடனே அவர்கள் 2 பேரும் தங்களது நண்பர்களான முருகேசன், நவநீதகிருஷ்ணன் ஆகியோரிடம் நடந்த சம்பவம் பற்றி கூறினர்.
பின்னர் அவர்கள் ஒன்று சேர்ந்து சென்று வினோ உள்ளிட்ட 5 பேரையும் தாக்கி உள்ளனர். அப்போது பிரகாஷ்ராஜ் கத்தியால் வினோவை குத்தினார்.
இதில் அவர் காயம் அடைந்தார்.இது குறித்து 2 தரப்பையும் சேர்ந்தவர்கள் தனித்தனியாக துடிய லூர் போலீசில் புகார் அளித்தனர். அதன் பேரில் போலீசார் இருதரப்பினர் மீதும் வழக்கு பதிவு செய்தனர்.
அதன் பேரில் பிரகாஷ்ராஜ் (வயது24), மனோஜ் ராஜ் (23), வினோ (26), நவநீதன் (25), நாகேந் திரன் (24) ஆகிய 5 பேரை கைது செய்தனர். யுவராஜ், சரண், முருகேசன், நவநீத கிருஷ்ணன் ஆகிய 4 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.