பெண் பயணியிடம் 5 பவுன் நகை திருட்டு


பெண் பயணியிடம் 5 பவுன் நகை திருட்டு
x

வாணியம்பாடியில் பெண் பயணியிடம் 5 பவுன் நகைககளை திருடிச்சென்ற மற்றொரு பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.

திருப்பத்தூர்

தாய் வீட்டுக்கு

கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் இருந்து மாலதி என்ற பெண் தனது கைக் குழந்தையுடன் திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியை அடுத்த ஈச்சங்கால் கிராமத்தில் உள்ள தாய் வீட்டிற்கு புறப்பட்டார். அவர் தங்க சங்கிலி மற்றும் கம்மல் என 5 பவுன் நகைகளை ஒரு பையில் வைத்துக்கொண்டு பெங்களூருவில் இருந்து ெரயில் மூலம் ஜோலார்பேட்டைக்கு வந்துள்ளார்.

பின்னர் அங்கிருந்து வாணியம்பாடி செல்லும் தனியார் பஸ்சில் பயணம் செய்துள்ளார். அடிக்கடி நகை உள்ளதா என்று பார்த்து விட்டு மீண்டும் பையில் வைத்துள்ளார்.

நகை திருட்டு

அப்போது அருகில் அமர்ந்து பயணம் செய்த ஒரு பெண், இதனை பார்த்துக்கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது. பின்னர் அந்த பெண், மாலதியிடம் பேச்சுக் கொடுத்து அவரை திசை திருப்பி பையில் வைத்திருந்த 5 பவுன் நகைகளை திருடிக்கொண்டு வாணியம்பாடி பஸ் நிலையத்தில் பஸ் நின்றவுடன் அந்தப்பெண் இறங்கி வேகமாக சென்றுள்ளார்.

மாலதி பஸ்சில் இருந்து இறங்கி பார்த்த போது பையில் வைத்திருந்த நகைகள் காணாமல் போனது கண்டு அதிர்ச்சியடைந்து கூச்சலிட்டுள்ளர். உடனே பஸ் நிலைத்தில் இருந்த பயணிகள் போலீஸ் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளனர். அதன்பேரில் விரைந்து சென்ற போலிசார் விசாரணை மேற்கொண்டு, உடன் பயணம் செய்த பெண் யார்?, எந்த பகுதியை சேர்ந்தவர் என்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story