பெண்ணின் வீட்டில் 5 பவுன் நகை திருட்டு


பெண்ணின் வீட்டில் 5 பவுன் நகை திருட்டு
x
தினத்தந்தி 3 Oct 2023 12:15 AM IST (Updated: 3 Oct 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

தக்கலை அருகே ஜெபக்கூட்டத்துக்கு சென்ற பெண்ணின் வீட்டில் 5 பவுன் நகையை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

கன்னியாகுமரி

தக்கலை:

தக்கலை அருகே ஜெபக்கூட்டத்துக்கு சென்ற பெண்ணின் வீட்டில் 5 பவுன் நகையை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

ஜெபக்கூட்டத்துக்கு சென்ற பெண்

தக்கலை அருகே உள்ள மூலச்சல் பகுதியை சேர்ந்தவர் விஜிலா ராணி (வயது 38). இவருடைய கணவர் ராபர்ட் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இவர்களது வீட்டில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்தநிலையில் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு வீட்டை பூட்டி விட்டு விஜிலா ராணி மகன்களுடன் தூத்துக்குடி மாவட்டம் நாலுமாவடியில் நடைபெறும் ஜெபக்கூட்டத்துக்கு சென்றார்.

வீட்டில் நகை திருட்டு

பின்னர் மீண்டும் வீடு திரும்பிய அவர் வழக்கமான பணிகளில் ஈடுபட்டார். மேலும் அன்றைய தினம் வீட்டில் பெயிண்டிங் உள்ளிட்ட பராமரிப்பு பணிகள் நடந்தது. மாலையில் அந்த பணியாளர்களுக்கு சம்பளம் கொடுப்பதற்காக மேஜையை திறந்து பணத்தை பார்த்தார்.

அப்போது பணத்துடன் வைத்திருந்த தங்க சங்கிலி, மோதிரம், கம்மல் என 5 பவுன் நகைகள் மாயமாகி இருப்பதை கண்டு விஜிலா ராணி அதிர்ச்சி அடைந்தார்.

மேஜையில் நகைகள் இருப்பதை நோட்டமிட்ட மர்ம ஆசாமிகள் வெளியூர் சென்றதை அறிந்து அவற்றை திருடிச் சென்றிருக்கலாம் என கூறப்படுகிறது.

இதுகுறித்து விஜிலா ராணி தக்கலை போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகைகளை திருடிச் சென்ற மர்ம ஆசாமிகளை தேடி வருகிறார்கள்.

1 More update

Related Tags :
Next Story