கை, கால்களை கட்டிப்போட்டு மூதாட்டியிடம் 5½ பவுன் நகை பறிப்பு


கை, கால்களை கட்டிப்போட்டு மூதாட்டியிடம் 5½ பவுன் நகை பறிப்பு
x

சோளிங்கரில் மூதாட்டியை கட்டிப்போட்டு 5½ பவுன் நகையை பறித்துச் சென்ற தம்பதியரை போலீசார் தேடி வருகின்றனர்.

ராணிப்பேட்டை

சோளிங்கர்

சோளிங்கரில் மூதாட்டியை கட்டிப்போட்டு 5 பவுன் நகையை பறித்துச் சென்ற தம்பதியரை போலீசார் தேடி வருகின்றனர்.

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் சங்கர் நகரை சேர்ந்தவர் கெங்காபாய் (வயது 70). இவர் பெரியமலை அடிவாரத்தில் உள்ள அன்னதான கூடத்தில் உணவு அருந்த சென்றுள்ளார். அப்போது அங்கு கைக்குழந்தையுடன் கணவன்-மனைவி இருந்துள்ளனர். அவர்கள் மூதாட்டி கெங்காபாயிடம் பேச்சு கொடுத்துள்ளனர். மூதாட்டியும் அவர்களிடம் தான் தனியாக உள்ளதாக கூறியுள்ளார்.

பிறகு கணவன்-மனைவி இருவரும் மூதாட்டியை வீட்டில் விடுவதாக கூறி மூதாட்டியின் வீட்டுக்கு சென்றுள்ளனர். அங்கு அவர்கள் இருவரும் அசதியாக இருக்கிறது, சிறிது நேரம் படுத்துக்கொள்கிறோம், நீங்களும் படுத்துங்கொள்ளுங்கள் என கூறி உள்ளனர்.

திடீரென தம்பதியினர் மூதாட்டியின் வாயில் துணியை வைத்து அடைத்து, கை, கால்களை கட்டிப்போட்டுவிட்டு கழுத்தில் இருந்த 5½ பவுன் செயினை பறித்துக் கொண்டு வீட்டை வெளிப்புறமாக மூடிவிட்டு சென்றுள்ளனர்.

சிறிது நேரம் கழித்து மூதாட்டியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் சென்று மூதாட்டியை மீட்டு உள்ளனர். இதுகுறித்து மூதாட்டி சோளிங்கர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ராஜ்குமார் வழக்குப்பதிவு செய்து நூதன முறையில் நகைைய பறித்து சென்ற தம்பதியினரை தேடி வருகிறார்.


Next Story