மூதாட்டியிடம் 5½ பவுன் நகைகள் பறிப்பு


மூதாட்டியிடம் 5½ பவுன் நகைகள் பறிப்பு
x

மூதாட்டியிடம் 5½ பவுன் நகைகளை பறித்த மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

திருச்சி

சிறுகனூர் அருகே உள்ள தேவிமங்கலம் மெயின் ரோட்டை சேர்ந்தவர் செல்லம்மாள் (வயது 72). இவர் நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் சாப்பிட்டுவிட்டு வீட்டின் வெளியே கட்டிலில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த மர்ம நபர்கள் சிலர் மூதாட்டி கையில் அணிந்திருந்த 2 பவுன் வளையல், கழுத்தில் அணிந்திருந்த3½ பவுன் சங்கிலி ஆகியவற்றை பறித்துக் கொண்டு தப்பி ஓடி விட்டனர். இது குறித்த புகாரின் பேரில் சிறுகனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மூதாட்டியிடம் நகைகளை பறித்த மர்ம ஆசாமிகளை தேடி வருகின்றனர்.


Next Story