அரியலூரில் ரூ.50 லட்சம் மதிப்பிலான 5 டன் குட்கா பொருட்கள் பறிமுதல்


அரியலூரில் ரூ.50 லட்சம் மதிப்பிலான 5 டன் குட்கா பொருட்கள் பறிமுதல்
x

குட்கா பொருட்கள் கடத்திச் செல்லப்பட்டதை வாகன சோதனையின் போது போலீசார் கண்டுபிடித்தனர்.

அரியலூர்,

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது, பழைய துணிகளை ஏற்றி வந்த ஒரு வாகனத்தை நிறுத்தி அதனை சோதனை செய்தனர். அப்போது அதில் மூட்டை மூட்டையாக குட்கா பொருட்கள் வைக்கப்பட்டு இருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர்.

இதையடுத்து அந்த வாகனத்தில் இருந்த 5 டன் குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். அவற்றின் மதிப்பு சுமார் 50 லட்சம் ரூபாய் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story