திருப்பதிக்கு 5 டன் மலர் மாலைகள் அனுப்பி வைப்பு


திருப்பதிக்கு 5 டன் மலர் மாலைகள் அனுப்பி வைப்பு
x

திருச்செங்கோட்டில் இருந்து திருப்பதிக்கு 5 டன் மலர் மாலைகள் அனுப்பி வைப்பி வைக்கப்படுகிறது.

நாமக்கல்

திருச்செங்கோடு

ஆந்திரா மாநிலம் திருப்பதியில் அருள்பாலிக்கும் ஸ்ரீமன் நாராயணனுக்கு ஆண்டுதோறும் நடக்கும் பிரம்மோற்சவத் திருவிழாவுக்கு திருச்செங்கோட்டில் இருந்து பூமாலைகள் அனுப்பப்பட்டு வருகிறது. இதன்படி இந்த ஆண்டு பிரமோற்சவ விழா நடக்க உள்ளது. இதற்காக திருச்செங்கோடு நாடார் திருமண மண்டபத்தில் திருப்பதி ஸ்ரீமன் நாராயணனுக்கு மலர்களை மாலைகளாக தொடுக்கும் விழா நடந்தது. திருச்செங்கோடு சுற்றுபகுதிகளை சேர்ந்த நுற்றுக்கணக்கான பக்தர்கள் வழங்கிய சம்பங்கி, மஞ்சள், சிவப்பு, சாமந்தி பூக்கள், தாமரை, மரு, மரிக்கொழுந்து உள்ளிட்ட சுமார் 5 டன் எடையுள்ள பல வண்ண பூக்களை திருச்செங்கோடு, சேலம், கொங்கணாபுரம், ராசிபுரம், ஆத்தூர் பகுதிகளை சேர்ந்த சுமார் 400-க்கும் மேற்பட்ட பெண்கள் மாலைகளாக தொடுத்தனர். இது குறித்து கொங்கணாபுரத்தை சேர்ந்த திருமலை திருப்பதி ஸ்ரீமன் நாராயணா நித்ய புஷ்ப கைங்கர்ய சபாடிரஸ்ட் நிர்வாகிகள் சுகந்தி, கனகராஜ் ஆகியோர் கூறியதாவது, கொங்கணாபுரத்தை சேர்ந்த திருமலை திருப்பதிஸ்ரீமன் நாராயணா நித்ய புஷ்ப கைங்கர்ய சபாடிரஸ்ட் சார்பில் ரதசப்தமி, வைகுண்ட ஏகாதசி, உகாதி, பிரம்மோற்சவத் திருவிழா ஆகியவற்றுக்கு பூமாலைகள் ஆண்டுதோறும் தொடுத்து அனுப்பி வருகின்றோம். இறைப்பணியில் அதிக ஆர்வமுள்ள பக்தர்கள் மாலை தொடுக்கும் பணியை செய்தனர். மேலும் மாலைகளோடு கரும்பு தென்னம்பாளை, தென்னங் குருத்து, இளநீர், பாக்கு குழைகள், மாங்கொத்துகள் சுமார் ரூ.2½ லட்சம் மதிப்புள்ள 10 ஆயிரம் ரோஜா செடிகள் ஆகியவற்றையும் சிறப்பு பூஜைகள் செய்து மாலைகள் உள்ளிட்ட அனைத்தையும் 3 லாரிகள் மூலம் திருமலைக்கு அனுப்பப்படும் என தெரிவித்தனர்.


Next Story