வேகமாக வந்த 5 லாரிகளுக்கு அபராதம்


வேகமாக வந்த 5 லாரிகளுக்கு அபராதம்
x

வேகமாக வந்த 5 லாரிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

அரியலூர்

அரியலூர் புறவழிச்சாலையில் வட்டார போக்குவரத்து அலுவலர் பிரபாகர், வாகன ஆய்வாளர் சரவணபவன் ஆகியோர் அதிவேகமாக வாகனங்கள் வருகிறதா? என்று ஆய்வு செய்தனர். கலெக்டர் உத்தரவின்படி நடந்த இந்த ஆய்வின்போது நவீன கருவியை சாலையில் வைத்து, அந்த வழியாக சென்ற நூற்றுக்கும் மேற்பட்ட கார், லாரி, பஸ்களை ஆய்வு செய்தனர். இதில் 5 லாரிகள் 100 கிலோ மீட்டர் வேகத்தில் வந்ததை கண்டறிந்து, அந்த லாரிகளை நிறுத்தி அபராதம் விதித்தனர். மேலும் 60 கி.மீ. வேகத்தில் வாகனங்களை ஓட்டினால் விபத்து ஏற்படாமல் தடுக்கலாம். அதிவேகமாக வாகனங்களை ஓட்டினால் விபத்து ஏற்பட்டு, பாதிப்பு அதிகமாக இருக்கும். எனவே வாகன ஓட்டிகள் சாலை விதிகளை மீறாமல் இருக்க வேண்டும். இந்த ஆய்வு தொடர்ந்து நடைபெறும் என்று அதிகாரிகள் கூறினார்கள்.


Next Story