தொழில் முனைவோர் கொரோனா உதவி மற்றும் நிவாரண திட்டம் செயல்படுத்த 50 கோடி நிதி ஒதுக்கீடு - அரசாணை வெளியீடு

தொழில் முனைவோர் கொரோனா உதவி மற்றும் நிவாரண திட்டம் செயல்படுத்த 50 கோடி நிதி ஒதுக்கீடு - அரசாணை வெளியீடு
x

தொழில் முனைவோர் கொரோனா உதவி மற்றும் நிவாரணத் திட்டத்தைச் செயல்படுத்த ரூ. 50 கோடி நிதி ஒதுக்கீடு செய்து, தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

சென்னை,

தொழில் முனைவோர் கொரோனா உதவி மற்றும் நிவாரணத் திட்டத்தைச் செயல்படுத்த ரூ. 50 கோடி நிதி ஒதுக்கீடு செய்து, தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

கொரோனா பெருந்தொற்று காலத்தில் நோயால் பாதிக்கப்பட்ட தகுதி வாய்ந்த தொழில் முனைவோர் தங்களது தொழிலை நேரடியாகவோ, வாரிசு தாரர் மூலமாகவோ மீண்டும் அமைக்கவோ அல்லது புதிய தொழில் தொடங்கவோ உதவிடும் வகையில் 25 லட்சம் வரை மானியத்துடன் கூடிய கடன் பெற்றுக்கொள்ளலாம்.

மேலும், இந்த திட்டத்தின்படி, 2020-21 மற்றும் 2021-22 ஆம் ஆண்டுகளில் கொரோனா நோய்த் தொற்றால் தொழில் பாதிக்கப்பட்டவர்கள் இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம் என அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story