தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு 50 மின் விசிறி, 4 வாட்டர் ஹீட்டர்கள் அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார்
தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு ரூ.2 லட்சம் மதிப்பிலான 50 மின்விசிறிகள், 4 வாட்டர் ஹீட்டர்களை சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார்
தூத்துக்குடி:
தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு ரூ.2 லட்சம் மதிப்பிலான 50 மின்விசிறிகள், 4 வாட்டர் ஹீட்டர்களை சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார்.
மின்விசிறி
தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரி பயன்பாட்டுக்காக ரூ.2 லட்சம் மதிப்புள்ள 50 மின்விசிறிகள், 4 வாட்டர் ஹீட்டர்கள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று மதியம் நடந்தது. நிகழ்ச்சிக்கு தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரி டீன் நேரு தலைமை தாங்கினார். மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் கலந்து கொண்டு மின்விசிறி, வாட்டர் ஹீட்டர்களை தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரி டீன் நேருவிடம் வழங்கினார்.
நிகழ்ச்சியில் உறைவிட மருத்துவ அலுவலர் சைலஸ் ஜெயமணி, மருத்துவ துணை கண்காணிப்பாளர் குமரன், மண்டல தலைவர் அன்னலட்சுமி, மாநகர தி.மு.க செயலாளர் ஆனந்தசேகரன் மற்றும் டாக்டர்கள், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
கோரிக்கை
பின்னர் அமைச்சர் கீதாஜீவன் நிருபர்களிடம் கூறியதாவது:-
தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் திடீர் ஆய்வு மேற்கொண்டோம். அப்போது பொதுமக்கள், காத்திருப்போர் அறையில் மின்விசிறி வசதி ஏற்படுத்த வேண்டும், மகப்பேறு வார்டில் ஹீட்டர் பழுதானதால், பிரசவித்த தாய்மார்களுக்கு வெந்நீர் கிடைக்கவில்லை. அதனை சரி செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
இதனை தொடர்ந்து முத்தமிழ் அறிஞர் கலைஞரின் 99-வது பிறந்தநாளை முன்னிட்டு அரசு ஆஸ்பத்திரியில் மகப்பேறு வார்டுக்கு தேவையான 50 மின்விசிறிகள், 4 வாட்டர் ஹீட்டர்கள் வழங்கப்பட்டு உள்ளது. இதனை உடனடியாக பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
நலத்திட்டம்
இதே போன்று கலைஞர் பிறந்தநாள் அரசு விழாவாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் மாவட்டத்தில் உள்ள அனைத்து பஞ்சாயத்து, ஒன்றிய அலுவலகம் அனைத்திலும் தமிழகத்தின் வரலாறு என்று அழைக்கப்படக்கூடிய கலைஞரின் பிறந்தநாள் விழா கொண்டாட தயாராகி வருகின்றனர்.
தி.மு.க. சார்பில் இளைஞர், மாணவர் அணிக்கான பயிற்சி பட்டறை, மகளிர் அணிக்கான பாசறை கூட்டம், ஆதரவற்றோர் இல்லங்களில் உணவு வழங்குதல், அன்று பிறக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் தங்க மோதிரம் வழங்குதல், தையல் எந்திரம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்குதல், ஆதிதிராவிடர் நல விடுதிக்கு தேவையான பொருட்கள் வழங்குதல் போன்ற நிகழ்ச்சிகள் நடத்த திட்டமிட்டு உள்ளோம். ஜூன் மாதம் முதல் கலைஞர் பிறந்தநாள் விழாவை கொண்டாட திட்டமிட்டு உள்ளோம்.
தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு
50 மின் விசிறி, 4 வாட்டர் ஹீட்டர்கள்
அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார்
தொடர்ந்து தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் இருந்து கழிவுநீர் வெளியேறுவதற்கான வடிகால் வசதி சீராக உள்ளதா? என்று அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி மற்றும் அலுவலர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.