அரசு பள்ளியில் ஊட்டச்சத்து மாத்திரை சாப்பிட்ட 50 மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம்...!


அரசு பள்ளியில் ஊட்டச்சத்து மாத்திரை சாப்பிட்ட 50 மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம்...!
x

ஆத்தூர் அரசு மகளிர் மேல்நிலை பள்ளியில் ஊட்டச்சத்து மாத்திரை சாப்பிட்ட 50 மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.

ஆத்தூர்,

சேலம் மாவட்டம் ஆத்தூரில் அரசு மகளிர் மேல்நிலை பள்ளி ஒன்று இயங்கி வருகின்றது. இந்த பள்ளியில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர்.

இந்த நிலையில் இன்று காலை பள்ளி மாணவிகளுக்கு வழக்கம் போல் ஊட்டச் சத்து மாத்திரைகள் வழங்கப்பட்டுள்ளது. இந்த மாத்திரையை சாப்பிட்ட மாணவிகளுக்கு சில மணி நேரத்திலைலேயே வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த ஆசிரியகர்கள் மற்றும் தலைமை ஆசிரியர் 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்தனர்.

சம்பவ இடத்திற்க வந்த ஆம்புலன்சுகள் வாந்தி, மயக்கம் ஏற்பட்ட மாணவிகளை மீட்டு ஆத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். தற்போது வரைக்கும் 50-க்கும் மேற்பட்ட மாணவிகள் வாந்தி, மயக்கம் ஏற்பட்ட நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களுக்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த மாணவிகளின் பெற்றோர்கள் பதறி அடித்து கொண்டு மருத்துவமனைக்கு வந்தனர். இதனால் ஆத்தூர் அரசு மருத்துவமனையில் பரபரப்பு ஏற்பட்டது.





Next Story