விஜயநாராயணத்தில் 500 வாழைகள் தீயில் எரிந்து நாசம்
விஜயநாராயணத்தில் 500 வாழைகள் தீயில் எரிந்து நாசம் அடைந்தன.
இட்டமொழி:
நாங்குநேரி சங்கர்நகர் மேலத்தெருவை சேர்ந்தவர் சுடலைக்கண்ணு மகன் ஆறுமுகம் (வயது 32). விவசாயி. இவருக்கு சொந்தமான தோட்டம் விஜயநாராயணத்தில் உள்ளது. அங்கு அவர் 7 ஆயிரம் வாழைகள் பயிரிட்டு இருந்தார். தற்போது வாழைகள் குலை தள்ளும் பருவத்தில் உள்ளது. நேற்று முன்தினம் மதியம் திடீரென அங்குள்ள வாழைகளில் தீப்பிடித்து எரிந்தது. உடனே அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து தீ மேலும் பரவாமல் அணைத்தனர். இருப்பினும், சுமார் 500 வாழைகள் தீயில் எரிந்து நாசமானதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து ஆறுமுகம் வடக்கு விஜயநாராயணம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதில் விஜயநாராயணத்தைச் சேர்ந்த ஒருவர் தனது தோட்டத்தில் உள்ள வாழையில் தீ வைத்ததாக குறிப்பிட்டு உள்ளார். இதுகுறித்து சப்-இன்ஸ்பெக்டர் அய்யப்பன், அந்த நபர் மீது சந்தேகத்தின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.