சென்னையில் முதற்கட்டமாக 500 மின்சார பஸ்கள் அறிமுகம்


சென்னையில் முதற்கட்டமாக 500 மின்சார பஸ்கள் அறிமுகம்
x

சென்னையில் முதற்கட்டமாக 500 மின்சார பஸ்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன என போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் கூறினார்.

கரூர்

கரூர்,

பஸ் கட்டணம் உயராது

கரூரில் மாவட்ட தி.மு.க. சார்பில் திராவிட பாசறை பயிலரங்கம் நடைபெற்றது. இதற்கு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி தலைமை தாங்கினார்.இதில் போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், மாநில திட்டக்குழு துணைத்தலைவர் ஜெயரஞ்சன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். பின்னர் போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் நிருபர்களிடம் கூறியதாவது:- தமிழகத்தில் பஸ் கட்டணம் உயராது. சிலிண்டருக்கு ஏற்கனவே மத்திய அரசு கொடுத்து வந்த மானியத்தை முழுமையாக கொடுத்தால் போதும். பிரதமர் கொடுத்த பல்வேறு வாக்குறுதிகள் எந்தநிலையில் இருக்கிறது என தெரியவில்லை. வெளிநாட்டில் இருக்கிற பணத்தை கொண்டு வந்து ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் ரூ.15 லட்சம் கொடுப்பேன் என்றார். அதை செய்யவில்லை.

500 மின்சார பஸ்கள்

காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது டீசல் என்ன விலையில் இருந்தது. பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தபிறகு எந்த அளவிற்கு உயர்த்தப்பட்டுள்ளது என்பது தெரியும். இது தேவையில்லாமல் மக்கள் மீது அவர்கள் ஏற்றுகின்ற சுமை. அதை முழுமையாக குறைக்க வேண்டும். அதையெல்லாம் செய்யாமல் மத்திய அரசு ஏற்றி வைத்துள்ள விலையில், மாநில அரசிற்கு வருகின்ற வருவாயை குறைத்து செய்ய வேண்டும் என்று கூறுவது தேவையற்ற வாதம்.

முதற்கட்டமாக 500 மின்சார பஸ்கள் சென்னையில் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. அதன்பிறகு அதனுடைய சேவையை பொறுத்து அடுத்தடுத்த கட்டங்களுக்கு கொண்டு செல்லப்படும். பேட்டரி பைக்குகளால் பல இடங்களில் விபத்துகள் ஏற்படுவதை மத்திய அரசே பார்த்து அதுகுறித்த கொள்கை முடிவு எடுத்து அறிவிக்க இருக்கிறார்கள். அதன்பின்னர் மாநில அளவிலேயே அதுகுறித்த நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story