டி.என்.பி.எஸ்.சி. குரூப்-3 ஏ தேர்வு எழுத 5 ஆயிரம் பேர் வரவில்லை


டி.என்.பி.எஸ்.சி. குரூப்-3 ஏ தேர்வு எழுத 5 ஆயிரம் பேர் வரவில்லை
x

நெல்லையில் டி.என்.பி.எஸ்.சி. குரூப்-3 ஏ தேர்வினை எழுத 5 ஆயிரம் பேர் வரவில்லை.

திருநெல்வேலி

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் (டி.என்.பி.எஸ்.சி.) ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் குரூப்-3 ஏ பதவிக்கான எழுத்து தேர்வு நேற்று காலையில் நடந்தது. இதற்காக நெல்லை, பாளையங்கோட்டை தாலுகாக்களில் நெல்லை பழைய பேட்டை ராணி அண்ணா மகளிர் கல்லூரி, அரசு பொறியியல் கல்லூரி, பேட்டை ம.தி.தா. இந்து கல்லூரி, பேட்டை காமராஜர் நகராட்சி மேல்நிலைப்பள்ளி, சந்திப்பு ம.தி.தா. இந்து மேல்நிலைப்பள்ளி, பாளையங்கோட்டை ஜான்ஸ், மேல்நிலைப்பள்ளி, கிறிஸ்துராஜா மேல்நிலைப்பள்ளி, காதுகேளாதோர் மேல்நிலைப்பள்ளி, ரோஸ்மேரி மெட்ரிக் பள்ளி, ஜெயராஜ் அன்னபாக்கியம் மெட்ரிக் பள்ளி, மேலப்பாளையம் முஸ்லிம் மேல்நிலைப்பள்ளி, காமராஜ் மேல்நிலைப்பள்ளி, மேரி சார்ஜென்ட் மேல்நிலைப்பள்ளி, சாராள் தக்கர் கல்லூரி, சாரதா கல்லூரி உள்ளிட்ட 28 இடங்களில் 34 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன.

இந்த தேர்வினை எழுதுவதற்கு 9 ஆயிரத்து 343 பேர் விண்ணப்பித்து இருந்தனர். எனினும் 4 ஆயிரத்து 308 பேர் மட்டுமே தேர்வு எழுதினர். 5 ஆயிரத்து 35 பேர் தேர்வு எழுத வரவில்லை. தேர்வு பணிகளை மேற்கொள்ள துணை தாசில்தார் நிலையில் 12 சுற்றுக்குழு அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டு கண்காணித்தனர். தேர்வு மைய நடவடிக்கைகளை பதிவு செய்ய 35 வீடியோகிராபர்களும், தேர்வினை கண்காணிக்க 34 ஆய்வு அலுவலர்களும் நியமனம் செய்யப்பட்டு பணியில் ஈடுபட்டனர். தேர்வு மையங்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்கப்பட்டது. சிறப்பு பஸ்களும் இயக்கப்பட்டன.



Next Story