இந்தோ-திபெத் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் மூலம் ஒரே நேரத்தில் 5 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் திட்டம்

இந்தோ-திபெத் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் மூலம் ஒரே நேரத்தில் 5 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் திட்டம்
x
தினத்தந்தி 15 Aug 2023 12:15 AM IST (Updated: 15 Aug 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்தோ திபெத் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் மூலம் ஒரே நேரத்தில் 5 ஆயிரம் மரக்கன்றுகளை நடும் திட்டத்தை மாவட்ட கலெக்டர் ஆஷாஅஜீத் தொடங்கி வைத்தார்.

சிவகங்கை

சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்தோ திபெத் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் மூலம் ஒரே நேரத்தில் 5 ஆயிரம் மரக்கன்றுகளை நடும் திட்டத்தை மாவட்ட கலெக்டர் ஆஷாஅஜீத் தொடங்கி வைத்தார்.

சுதந்திர தினம்

நாட்டின் சுதந்திர தினம் இன்று (செவ்வாய்க்கிழமை) கொண்டாடப்படவுள்ளது. இதையொட்டி சிவகங்கையை அடுத்த இலுப்பக்குடியில் உள்ள இந்தோ-திபெத் எல்லை பாதுகாப்பு படை பயிற்சி முகாமில் பணிபுரியும் மற்றும் பயிற்சி பெறும் வீரர்கள் சேர்ந்து கிளாதரி கிராமத்தில் ஒரே நேரத்தில் 25 ஏக்கரில் 5 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தின் தொடக்க நிகழ்ச்சி நடந்தது.

இதில் மாவட்ட கலெக்டர் ஆஷா அஜீத் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டு வைத்து திட்டத்தை தொடங்கி வைத்தார்.

5 ஆயிரம் மரக்கன்றுகள்

இதை தொடர்ந்து மா, கொய்யா, சந்தனம், நெல்லி போன்ற 5 ஆயிரம் மரக்கன்றுகளை எல்லை பாதுகாப்புப்படை வீரர்களுடன் சேர்ந்து கிராம பொதுமக்களும் நட்டனர்.

நிகழ்ச்சியில் இந்தோ திபெத் பயிற்சி மையத்தின் கமாண்டன்ட் சுரேஷ் யாதவ், இந்தோ-திபெத் பயிற்சி மைய காவல் கண்காணிப்பாளர் சந்திரசேகர், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சிவராமன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Next Story