ஊட்டியில் 500-வது மலைச்சாரல் கவியரங்கம்
ஊட்டியில் 500-வது மலைச்சாரல் கவியரங்கம்
ஊட்டி
நீலகிரி மாவட்ட தமிழ் கவிஞர்கள் சங்கத்தின் சார்பில் மாதந்தோறும் ஊட்டியில் கவியரங்கம் நடத்தப்பட்டு வருகிறது. இந்தநிலையில் 500-வது நீலகிரி மாவட்ட மலைச்சாரல் கவியரங்கம் நேற்று நடந்தது. இதற்கு தலைவர் பெள்ளி முன்னிலை வகித்தார். செயலாளர் பிரபு தலைமை தாங்கினார். 500-வது கவியரங்கை முன்னிட்டு புலவர் சோலூர் கணேசன் கேக் வெட்டி விழாவை தொடங்கி வைத்தார். கவிஞர் ஜனார்தனன் கானா பாடலுடன் கவியரங்கம் அரங்கேறியது. இதில் கவிஞர்கள் ரமேஷ், ராஜா, நீலமலை ஜேபி, ஜமிலா பேகம், மதிமாறன், மணி அர்ச்சுணன், மாரியப்பன், சமன்குமார், வாசமல்லி, மயில் வாகனம், புலவர் நாகராஜ் பங்கேற்றனர். தமிழ் வெங்கடேஷ், மதநல்லிணக்க அமைதி குழு கிருஷ்ணன், தேசிய பசுமை இயக்க ஒருங்கிணைப்பாளர் சிவதாஸ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
முன்னதாக ஒடிசாவில் நடந்த ரெயில் விபத்தில் உயிரிழந்தோர் மற்றும் ஓய்வுபெற்ற ஆசிரியர் கிருஷ்ணன் ஆகியோருக்கு இரங்கல் தெரிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது. முடிவில் வாசகர் வட்ட தலைவர் அமுதவல்லி நன்றி கூறினார்.