52 மதுபானக்கூடங்களுக்கு 'சீல்'


52 மதுபானக்கூடங்களுக்கு சீல்
x

52 மதுபானக்கூடங்களுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.

விருதுநகர்


மாவட்டத்தில் 64 உரிமம் பெற்ற மதுபானக்கூடங்கள் உள்ள நிலையில் 107 மதுபானக்கூடங்கள் உரிம கட்டணம் கட்டாத நிலையில் உரிமம் தற்காலிக ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின் பேரில் கலால் துறை, வருவாய் துறை மற்றும் போலீசார் மாவட்டம் முழுவதும் உரிமம், தற்காலிகரத்து செய்யப்பட்ட மதுபானக்கூடங்களில் ஆய்வு மேற்கொண்டனர். இதனை தொடர்ந்து 52 மதுபான கூடங்களுக்கு 'சீல்' வைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து 'சீல்' வைக்கப்படும் நடவடிக்கை நடைபெற்று வருகிறது. தற்காலிக உரிமம் ரத்து செய்யப்பட்ட 107 மதுபானக்கூடங்களுக்கும் 'சீல்' வைக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

1 More update

Related Tags :
Next Story