மதுரையில் புதிதாக 54 பேருக்கு கொரோனா


மதுரையில் புதிதாக 54 பேருக்கு கொரோனா
x

மதுரையில் நேற்று ஒரே நாளில் 54 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது.

மதுரை

மதுரையில் கடந்த சில தினங்களாக கொரோனா அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 54 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. இதுபோல், 14 பேர் குணம் அடைந்து வீட்டிற்கு சென்றனர். நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பாதிப்பால், சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 252 ஆக உயர்ந்துள்ளது. சிகிச்சையில் இருப்பவர்களில் பெரும்பாலானவர்கள் வீட்டு தனிமைப்படுத்துதலில் டாக்டர்களின் கண்காணிப்பில் இருக்கிறார்கள்.நேற்று புதிதாக யாரும் உயிரிழக்கவில்லை.


Related Tags :
Next Story