ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் ரூ.57¾ லட்சம் உண்டியல் காணிக்கை
ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் ரூ.57¾ லட்சம் உண்டியல் காணிக்கை
ஆனைமலை
ஆனைமலை மாசாணியம்மன் கோவிலுக்கு கோவை மாவட்டம் மட்டுமின்றி வெளி மாவட்டம், பிற மாநிலங்களில் மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் அம்மனை தரிசிக்க வருகின்றனர். இந்த நிலையில் கோவில் வளாகத்தில் பக்தர்கள் காணிக்கை செலுத்துவதற்கு 22 நிரந்தர உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளன. இந்த உண்டியல் திறக்கப்பட்டு காணிக்கை எண்ணும் பணி நேற்று நடைபெற்றது. காணிக்கை எண்ணும் பணியில் கோவில் ஊழியர்கள் மற்றும் பக்தர்கள் தன்னார்வலர்கள், ஈடுபட்டனர். இதில் தட்டு காணிக்கை உண்டியலில் ரூ.15 லட்சத்து 15 ஆயிரத்து 422-ம் நிரந்தர உண்டியில் ரூ.42 லட்சத்து 70 ஆயிரத்து 863-ம் என மொத்தம் ரூ.57 லட்சத்து 86 ஆயிரத்து 285-ம் காணிக்கையாக பக்தர்கள் செலுத்தியிருந்தனர். தங்கம் 204 கிராமும், வெள்ளி 522 கிராமும் இருந்்தது. மாசாணி அம்மன் கோவில் உதவி ஆனணயர் ரா.விஜயலட்சுமி, பேரூர் உதவி ஆணையர் விமலா, கண்காணிப்பாளர் புவனேஸ்வரி, ஆய்வாளர் சித்ரா, துணைப் பாதுகாப்பு அதிகாரி முத்துராமன் உள்பட பக்தர்கள் கலந்து கொண்டனர்.