கிறிஸ்தவ ஆலயத்தில் ரூ.58 லட்சம் மோசடி


கிறிஸ்தவ ஆலயத்தில் ரூ.58 லட்சம் மோசடி
x
தினத்தந்தி 8 Sept 2023 1:00 AM IST (Updated: 8 Sept 2023 1:00 AM IST)
t-max-icont-min-icon

கவுண்டம்பாளையம் அருகே சி.எஸ்.ஐ. கிறிஸ்துநாதர் ஆலயத்தில் ரூ.58 லட்சம் மோசடி செய்த கணக்காளர் மீது மோசடி வழக்கு பதிவு செய்தனர்.

கோயம்புத்தூர்

துடியலூர்


கோவை கவுண்டம்பாளையம் அருகே டி.வி.எஸ். நகரில் சி.எஸ்.ஐ. கிறிஸ்துநாதர் ஆலயம் உள்ளது. இங்கு 2012 முதல் 2022 வரை வருடாந்திர கணக்கு ஆய்வு செய்யப்பட்டது. அதில் ரூ.58 லட்சம் மோசடி நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இது குறித்து ஆலய பொருளாளர் பிரின்ஸ் போஸ் கவுண்டம்பாளை யம் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் அந்த ஆலயத்தில் கணக்காளராக வேலை பார்த்த சைலஜா என்பவர் மீது மோசடி வழக்கு பதிவு செய்தனர்.


விசாரணையில் சைலஜா போலி ஆவணங்கள் தயாரித்து பணத்தை மோசடி செய்தது தெரிய வந்தது. மேலும் அவருக்கு வேறு யாரும் உடந்தையாக இருந்தார்களா? என்பது உள்பட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.



Next Story