திருச்சியில் 5-வது போலீஸ் ஆணையக்குழு மண்டல மாநாடு


திருச்சியில் 5-வது போலீஸ் ஆணையக்குழு மண்டல மாநாடு
x

திருச்சியில் நடந்த 5-வது போலீஸ் ஆணையக்குழு மண்டல மாநாட்டில் 9 மாவட்ட கலெக்டர்கள், போலீஸ் சூப்பிரண்டுகள் கலந்து கொண்டனர்.

திருச்சி

மண்டல மாநாடு

திருச்சியில் 5-வது போலீஸ் ஆணையக்குழு மத்திய மண்டல மாநாடு கலையரங்கம் திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. 5-வது போலீஸ் ஆணையக்குழு தலைவரும், சென்னை ஐகோர்ட்டு ஓய்வுபெற்ற நீதிபதியுமான டி.செல்வம் தலைமை தாங்கி, மாநாட்டை தொடங்கி வைத்தார்.

மாநாட்டில் ஆணையக்குழு உறுப்பினர்களான ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி அலாவுதீன், ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ். ராதாகிருஷ்ணன் ஆகியோர் பேசினர். ஆணையக்குழு உறுப்பினர் செயலரும், கூடுதல் டி.ஜி.பி.யுமான மகேஷ்குமார் அகர்வால் வரவேற்றார்.

9 மாவட்ட கலெக்டர்கள் பங்கேற்பு

இதில் கலெக்டர்கள் ஜானி டாம் வர்கீஸ் (நாகை), மகாபாரதி (மயிலாடுதுறை), சாருஸ்ரீ (திருவாரூர்), தீபக் ஜாக்கப் (தஞ்சை), மெர்சிரம்யா (புதுக்கோட்டை), பிரபுசங்கர் (கரூர்), கற்பகம் (பெரம்பலூர்), ஆனிமேரி ஸ்வர்னா (அரியலூர்), பிரதீப்குமார் (திருச்சி), திருச்சி மத்திய மண்டல போலீஸ் ஐ.ஜி.கார்த்திகேயன், மாநகர போலீஸ் கமிஷனர் காமினி, தஞ்சை சரக டி.ஐ.ஜி. ஜெயச்சந்திரன், திருச்சி சரக டி.ஐ.ஜி.பகலவன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் ஹர்ஷ்சிங் (நாகை), மீனா (மயிலாடுதுறை), சுரேஷ்குமார் (திருவாரூர்), ஆசிஷ்ராவத் (தஞ்சை), வந்திதாபாண்டே (புதுக்கோட்டை), சுந்தரவதனம் (கரூர்), ஷ்யாம்ளாதேவி (பெரம்பலூர்), பெரோஸ்கான் அப்துல்லா (அரியலூர்), வருண்குமார் (திருச்சி) மற்றும் மாநகர போலீஸ் துணை கமிஷனர்கள் செல்வகுமார், அன்பு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பொதுமக்களுடன் நட்புறவு

மாநாட்டில் காவல் துறையினருக்கான குறைகளை நிவர்த்தி செய்தல், காவல்துறையினரின் செயல்பாடுகளை மேம்படுத்துவது, பொதுமக்கள்-காவல்துறையினர் நட்புறவோடு இணைந்து செயல்படுவது ஆகியவை குறித்து ஆலோசிக்கப்பட்டது.

மேலும், போதைப்பொருட்கள் விற்பனையை தடுப்பதில் அதிக கவனம் செலுத்த வேண்டும். பாதுகாப்பு பணிகளில் ஈடுபடும் காவல்துறையினருக்கான தேவைகளை அறிந்து அவர்களுடைய மனுக்களுக்கு உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆணையத்தின் சார்பில் காவல்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.


Next Story