பணம் வைத்து சூதாடிய 6 போ் கைது


பணம் வைத்து சூதாடிய 6 போ் கைது
x

பணம் வைத்து சூதாடிய 6 போ் கைது செய்யப்பட்டனா்.

ஈரோடு

கடத்தூர்

கோபி அருகே உள்ள உக்கரம் கீழ்பவானி வாய்க்கால் பகுதியில் கடத்தூர் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அந்த பகுதியில் சிலர் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்ததை கண்டனர். உடனே அவர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள், 'சத்தியமங்கலத்தை சேர்ந்த ரவி (வயது 36), புஞ்சைபுளியம்பட்டியை சேர்ந்த பரமசிவம் (40), கிருஷ்ணன் (36), சின்னகண்ணன் (45), சுந்தரம் (42), தங்கராசு (50) என்பதும், அவர்கள் பணம் வைத்து சூதாடிக்கொண்டிருந்ததும்,' தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவர்கள் 6 பேரையும் போலீசார் கைது செய்ததுடன், அவர்களிடம் இருந்து ரூ.1,750-யும் பறிமுதல் செய்தனர்.

1 More update

Related Tags :
Next Story