அதிக பாரம் ஏற்றி வந்த 6 லாரிகள் பறிமுதல்


அதிக பாரம் ஏற்றி வந்த 6 லாரிகள் பறிமுதல்
x

அதிக பாரம் ஏற்றி வந்த 6 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டது.

திருநெல்வேலி

பணகுடி:

வள்ளியூர் துணை போலீஸ் சூப்பிரண்டு யோகேஷ் குமார் மற்றும் போலீசார் பணகுடி புறவழிச்சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக வேகமாக வந்த 5 லாரிகளை மடக்கி சோதனை செய்தனர். அதில் அளவுக்கு அதிகமாக பாரம் ஏற்றி வந்தது தெரியவந்தது. இதையடுத்து 5 லாரிகளை போலீசார் பறிமுதல் செய்து, டிரைவர்களிடம் விசாரணை நடத்தினார்கள்.

இதேபோல் மூன்றடைப்பு போலீசார் உள்வாய் சாத்தான் குளம் அருகே நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மூலைக்கரைப்பட்டியில் இருந்து மூன்றடைப்பு நோக்கி அனுமதி இன்றி அதிகமாக கனிம பொருட்கள் ஏற்றி வந்த லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர்.


Next Story