6 கிலோ கஞ்சா பறிமுதல்
கன்னிவாடி அருகே 6 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
திண்டுக்கல்
கன்னிவாடி அருகே உள்ள தெத்துப்பட்டியை சேர்ந்தவர் பழனிவேல் (வயது 75). சுரக்காய்பட்டியை சேர்ந்தவர் முருகன் (60). இவர்கள் 2 பேரும் சேர்ந்து, தெத்துப்பட்டியில் உள்ள பழனிவேல் வீட்டில் வைத்து கஞ்சா விற்பதாக கன்னிவாடி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெள்ளையப்பன் தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர் சிவராஜ் மற்றும் போலீசார், பழனிவேல் வீட்டில் சோதனை செய்தனர். அப்போது அங்கிருந்து 6 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து பழனிவேல், முருகன் ஆகியோரை கைது செய்தனர்.
Related Tags :
Next Story