உண்டியல் காணிக்கை மூலம் ரூ.6 லட்சத்து 60 ஆயிரம் வருவாய்


உண்டியல் காணிக்கை மூலம் ரூ.6 லட்சத்து 60 ஆயிரம் வருவாய்
x
தினத்தந்தி 30 Sept 2023 4:45 AM IST (Updated: 30 Sept 2023 4:46 AM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவிலில் உண்டியல் காணிக்கை மூலம் ரூ.6 லட்சத்து 60 ஆயிரம் வருவாயாக கிடைத்தது.

திண்டுக்கல்

திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நேற்று நடந்தது. இதற்கு இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் சுரேஷ் தலைமை தாங்கினார். ஆய்வாளர் சுரேஷ்குமார், கோவில் அறங்காவலர்கள் முன்னிலை வகித்தனர். இதில் 11 உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டன. உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் பெண் பக்தர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். உண்டியல் காணிக்கை மூலம் 67 கிராம் தங்கம், 1,243 கிராம் வெள்ளி, ரூ.6 லட்சத்து 60 ஆயிரம் பணம் வருவாயாக கிடைத்தது.


Next Story