இறந்த பெண்ணின் குடும்பத்திற்கு ரூ.6½ லட்சம் இழப்பீடு


இறந்த பெண்ணின் குடும்பத்திற்கு ரூ.6½ லட்சம் இழப்பீடு
x
தினத்தந்தி 3 Aug 2023 12:15 AM IST (Updated: 3 Aug 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

இறந்த பெண்ணின் குடும்பத்திற்கு ரூ.6½ லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டது.

சிவகங்கை

இளையான்குடி அடுத்த வண்டல் கிராமத்தை சேர்ந்தவர் அந்தோணிசாமி(வயது 50). இவரது மனைவி புனித மேரி (45). கடந்த ஆண்டு மே மாதம் 28-ந் தேதி புனித மேரி வீட்டில் சமையல் செய்ய கியாஸ் அடுப்பை பற்ற வைத்த போது சிலிண்டர் வெடித்து பலத்த காயம் அடைந்து இறந்தார். இதை தொடர்ந்து அந்தோணிசாமி சிவகங்கையில் உள்ள நுகர்வோர் நீதிமன்றத்தில் ஐ.ஓ.சி. எரிவாயு நிறுவனம் மற்றும் திருவாடானையில் உள்ள எரிவாயு முகவர் ஆகியோர் மீது ரூ.10 லட்சம் நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கின் விசாரணை நேற்று நுகர்வோர் நீதிமன்ற தலைவர் பாலசுப்பிரமணியன், உறுப்பினர்கள் குட்வின் சாலமன் ராஜ், மற்றும் நமசிவாயம் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

அப்போது ஐ.ஓ.சி. நிறுவனத்தினர் இறந்து போன புனித மேரியின் குடும்பத்திற்கு ரூ.6 லட்சத்து 49 ஆயிரம் இழப்பீடு வழங்க முன் வந்தனர். இதை அந்தோணிசாமி பெற்றுக்கொண்டார்.


Next Story