செல்போன் கடையில் ரூ.6½ லட்சம் கையாடல்


செல்போன் கடையில் ரூ.6½ லட்சம் கையாடல்
x

விருதுநகரில் செல்போன் கடையில் ரூ.6½ லட்சத்தை கையாடல் செய்த பெண் ஊழியர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

விருதுநகர்


விருதுநகரில் செல்போன் கடையில் ரூ.6½ லட்சத்தை கையாடல் செய்த பெண் ஊழியர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

செல்போன் கடை

விருதுநகர் அல்லம்பட்டியை சேர்ந்தவர் கணேசன் (வயது 43). இவர் விருதுநகர்-மதுரை ரோட்டில் செல்போன் விற்பனை கடையும், அல்லம்பட்டியில் குளிர்பான விற்பனை கடையும் வைத்துள்ளார்.

இவரது செல்போன் விற்பனை கடையில் விருதுநகர் பாண்டியன் நகரை சேர்ந்த ஆர்த்தி லட்சுமி (22) என்பவர் காசாளராக பணியாற்றி வந்தார். கடையின் முழு கணக்கு வழக்குகளையும் அவரிடம் ஒப்படைத்திருந்ததாக கூறப்படுகிறது.

ரூ.6½ லட்சம் கையாடல்

இந்தநிலையில் கடந்த ஏப்ரல் மாதம் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தபோது கணேசனின் பையில் இருந்து ரூ. 20 ஆயிரத்தை ஆர்த்தி லட்சுமி எடுத்தது தெரியவந்தது.

இதனை தொடர்ந்து கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் கணக்கு வழக்குகளை ஆய்வு செய்தார். அப்போது ஆர்த்தி லட்சுமி விற்பனை தொகையை குறைத்துக் காட்டியும் ரொக்கமாக விற்பனை செய்ததை ஜிபே முறையில் விற்பனை செய்ததாக கணக்கு எழுதியும் ரூ. 6 லட்சத்து 43 ஆயிரத்து 421-ஐ கையாடல் செய்தது தெரியவந்தது. கடையில் இருந்த 1 பவுன் மோதிரத்தையும் ஆர்த்தி லட்சுமி எடுத்தது தெரியவந்தது.

இதுபற்றி கணேசன் கொடுத்த புகாரின் பேரில் விருதுநகர் மேற்கு போலீசார் ஆர்த்தி லட்சுமி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


Next Story