6 இறைச்சி கடைகள் தீயில் எரிந்து நாசம்


6 இறைச்சி கடைகள் தீயில் எரிந்து நாசம்
x

6 இறைச்சி கடைகள் தீயில் எரிந்து நாசமாயின.

திருச்சி

கொள்ளிடம் டோல்கேட்:

தீப்பற்றி எரிந்தது

திருச்சி நெ.1 டோல்கேட் அருகே சமயபுரம் செல்லும் சாலை ஓரத்தில் நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான இடத்தில் பிச்சாண்டார்கோவில் பகுதியை சேர்ந்த சிலர் கீற்றால் வேயப்பட்ட கூரை கொட்டகை அமைத்து, அதில் இறைச்சிக்கடை வைத்து நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நேற்று அதில் ஒரு கடையின் மேற்கூரை திடீரென தீப்பற்றி எரிந்தது.

இதனைக் கண்ட கடை உரிமையாளர் உள்ளிட்டோர் தீயை அணைக்க முயன்றனர். ஆனால் அணைக்க முடியவில்லை. மேலும் காற்றின் வேகத்தால் தீ மளமளவன அருகில் இருந்த மற்ற கடைகளுக்கும் பரவி கொழுந்து விட்டு எரிந்தது. இதனால் அப்பகுதியில் புகை மூட்டம் ஏற்பட்டது. மேலும் சமயபுரம் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, வாகனங்கள் நீண்ட வரிசையில் நின்றன.

6 கடைகள் நாசம்

இது குறித்து தகவல் அறிந்த சமயபுரம் தீயணைப்பு நிலைய அலுவலர் முத்துக்குமார் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இருப்பினும் 6 கடைகள் முற்றிலும் தீக்கிரையானது. அதில் இருந்த பொருட்கள் நாசமாயின. இதுகுறித்து கொள்ளிடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story