பெட்டிக்கடையில் திருடியவருக்கு 6 மாதம் சிறை


பெட்டிக்கடையில் திருடியவருக்கு 6 மாதம் சிறை
x
தினத்தந்தி 23 April 2023 12:30 AM IST (Updated: 23 April 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

பெட்டிக்கடையில் திருடியவருக்கு 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

திண்டுக்கல்


இடையக்கோட்டை அருகே மார்க்கம்பட்டியை சேர்ந்தவர் நாகராஜ். அதே பகுதியில் பெட்டிக்கடை வைத்துள்ளார். கடந்த 4.10.2022-ந்தேதி இரவு இவருடைய கடையின் பூட்டை உடைத்த மர்ம நபர், கடையில் இருந்த ரூ.481-ஐ திருடிச்சென்றுவிட்டார். இது குறித்து இடையக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி வழக்குப்பதிவு செய்து பெட்டிக்கடையில் பணம் திருடிய பழனியை அடுத்த நெய்க்காரப்பட்டியை சேர்ந்த சின்னகாளியப்பன் (வயது 48) என்பவரை கைது செய்தார்.

மேலும் அவர் மீது ஒட்டன்சத்திரம் ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் வழக்கும் தொடர்ந்தார். பல்வேறு கட்டங்களாக நடந்து வந்த இந்த வழக்கு விசாரணையில் நேற்று முன்தினம் தீர்ப்பு கூறப்பட்டது. அதில் குற்றம்சாட்டப்பட்ட சின்னகாளியப்பனுக்கு 6 மாதம் சிறை தண்டனையும், ரூ.200 அபராதமும் விதித்து மாஜிஸ்திரேட்டு செல்வமகேஸ்வரி உத்தரவிட்டார்.



Next Story